விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை திருத்த தீர்மானம் !


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கருமபீடத்தில், வெளிநாட்டு சாரதி உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணங்களைத் திருத்தம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய வளாகத்தில் வழங்கப்படும் வசதிகளுக்கு, இதற்காக அறவிடப்பட்ட 2,000 ரூபா கட்டணம் போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, காலத்திற்கேற்ப கட்டணங்களை இற்றைப்படுத்தி, 2025.11.17 ஆம் திகதிய 2463/04 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் திருத்தப்பட்ட கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.