
(சித்தா)
சித்திரவேல் மோகனா அகில இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தினையும், தேசிய மட்டத்தில் 18 ஆவது இடத்தினையும் பெற்றதுடன் காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளராக நியமனம் பெற்றதனைப் பாராட்டுமுகமாக தனது பிறந்த கிராமமான சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் கோலாகலமான முறையில் பாராட்டு வைபவம் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது 10.01.2026 இல் சித்தாண்டி ஸ்ரீ மணத்துறைப்பிள்ளையார் ஆலய நிர்வாக சபையின் ஒழுங்கமைப்பில் இதன் தலைவர் த.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, முன்னாள்உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.யோகராசா, ஆசிரிய ஆலோசகர் எஸ். சிவராசா முன்னாள் அதிபர்களான வ.பஞ்சலிங்கம், க.பகீரதன் மற்றும் சித்தாண்டி ஸ்ரீ மணத்துறைப்பிள்ளையார் ஆலய சபையின் உறுப்பினர்கள், சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், சித்தாண்டி பண்ணையாளர் சங்க உறுப்பினர்கள், சித்தாண்டி பெரியதம்பிரான் ஆலயம், முத்துமாரியம்மன் ஆலயம், செம்பித்துறை நாகதம்பிரான் ஆலயம் போன்றவற்றின் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு சித்திரவேல் மோகனாவினைப் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டினர்.
விஞ்ஞானப் பட்டதாரியான சித்திரவேல் மோகனா தனது ஆரம்பக் கல்வியைச் சித்தாண்டி சிறி இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும், உயர்தரத்தினை வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பினையும் மேற்கொண்டிருந்தார். அத்துடன் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் தோற்றி அதில் சித்தி பெற்று ஆசிரியராகவும் பணியினைத் தொடர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.









.jpg)





.jpg)

