விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது !


கொழும்பு பேலியகொடை - புலுகஹா சந்தி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் சந்தேக நபர்கள் நால்வர் நேற்று திங்கட்கிழமை (05) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விபச்சார விடுதியை நிர்வகிக்க உதவிய சந்தேகநபர் ஒருவர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், ஹிங்குல்வல, மஹியங்கனை, களனி மற்றும் மாவனெல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.