அம்பாறையில் அக்கரைப்பற்று - பெரியபள்ளக்காடு பகுதியில் உள்ள கல்ஓயா ஆற்றில் முதலை இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் பதிவாகியுள்ளது.
காணாமல்போனவர் ஒலுவில் 01 பகுதியைச் சேர்ந்த 37 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
கல்ஓயா ஆற்றின் மறுகரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை எடுக்க மற்றொரு நபருடன் நீந்திச் சென்றபோது, முதலை அவரை இழுத்துச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போனவரை தேடுவதற்காக பொலிஸ் அதிகாரிகள், கடற்படை டைவிங் குழு, சம்மாந்துறை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்கரைப்பற்று பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)



.jpg)

.jpeg)


