
இந்து மக்கள் இன்று (15) மகா சிவராத்திரி விரதத்தை மிகுந்த பக்திப் பரவசத்துடன் அனுஷ்டித்து வருகின்றனர். “சிவனுக்காக ஒரு இரவு” எனப் போற்றப்படும் இந்நாளில், நாடளாவிய ரீதியில் உள்ள சிவாலயங்களில் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
பக்தர்கள் இன்று அதிகாலை முதல் புனித நீராடி, உபவாசம் இருந்து ஆலயங்களுக்குச் சென்று வருகின்றனர். இன்று இரவு முழுவதும் தூங்காமல் (விழித்திருந்து) சிவபுராணம் பாடுதல், பஜனைகள் செய்தல் மற்றும் தியானத்தில் ஈடுபடுதல் என ஆன்மீகச் சடங்குகள் தொடரவுள்ளன.
பிரதான சிவாலயங்களுக்குச் செல்லும் பக்தர்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரதத் திணைக்களம் விசேட சேவைகளை முன்னெடுத்துள்ளன.
ஆலயங்களுக்கு அருகில் நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பு வழங்கவும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், “அறியாமை எனும் இருள் நீங்கி, ஞானம் எனும் ஒளி பிறக்கட்டும்” என சிவராத்திரி வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.




.jpeg)





.jpeg)

