இலங்கையில் தற்போது 1,050 தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களின் கீழ் சுமார் 1,50,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்கச் சட்டம் தற்போதைய தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதால், இத்துறையை வினைத்திறனாக்கப் புதிய சட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, பாதுகாப்பு ஊழியர்களுக்குத் தேசிய தொழில் தகைமை (NVQ) மட்டத்திலான பயிற்சிகள், புதிய ஒழுக்கக்கோவை மற்றும் சேவைகளின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மேலும், நிறுவனங்களைப் பதிவு செய்தல், துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் விதிகளை மீறும் நிறுவனங்களின் அனுமதியை இரத்து செய்தல் போன்ற அதிகாரங்களும் முறைப்படுத்தப்படவுள்ளன.













