தரவுகளின்படி, மாதாந்திர அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அதிக செலவு கொழும்பு மாவட்டத்தில் ரூ. 18,044 ஆக பதிவாகியுள்ளது. குறைந்த செலவு மொனராகலை மாவட்டத்தில் ரூ. 15,997 ஆக உள்ளது.
வறுமைக் கோடு என்பது ஒருவரின் அடிப்படை உணவு மற்றும் உணவல்லாத தேவைகளை பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச செலவைக் குறிக்கிறது. வாழ்வாதாரச் செலவு மற்றும் பணவீக்க மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் இது மாதந்தோறும் திருத்தப்படுகிறது.
இந்த அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு 2012/13 குடும்ப வருமான மற்றும் செலவுக் கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு புதுப்பிக்கப்பட்டதாக துறை தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில் விலை வேறுபாடுகளை கருத்தில் கொண்டு மாவட்ட வாரியான அதிகாரப்பூர்வ வறுமைக் கோடுகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.













