இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 யானைகள் உயிரிழப்பு !


நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

காட்டு யானைகளின் உயிரிழப்புக்கு காரணங்களாவன துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், சட்டவிரோத மின்சார வேலிகள், புகையிரத விபத்துக்கள், விஷம் வைத்தல் மற்றும் நீரில் மூழ்குதல் என்பனவாகும்.

யானைகளின் மரணங்களுக்கு மேலதிகமாக, இதே காலப்பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 மனித மரணங்களும் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.