உணவு தேடித் திரிந்த காட்டுயானையொன்று கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தனமல்வில பகுதியில் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
சுமார் 30 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் விழுந்த யானை, மிகவும் குறுகலான கிணற்றில் உடலை அசைக்கவோ தும்பிக்கையை உயர்த்தவோ முடியாத நிலையில் சிக்கியிருந்ததாலேயே உயிரிழந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கிதுல்கோட் வனவிலங்கு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, கிணற்றினுள் யானை உயிரிழந்து கிடந்ததாக தெரிவித்தனர்.
உயிரிழந்த யானை 7 அடி உயரமும் சுமார் 20 வயதும் கொண்டது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.


.jpg)


.jpeg)






