இன்று (23) இது தொடர்பாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ஒருவருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றத்திடம் இருந்து நியாயமான தீர்ப்பை எதிர்பார்ப்பதாக தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மனைவி தெரிவித்தார்.
நாங்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து, எமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து எழுத்துமூலமாக கடிதமொன்றை கையளிப்பதற்காக வந்தோம்.
அத்துடன் எமது வழக்கு தொடர்பில் மேன்முறையீடு ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளோம். ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமிடம் இருந்து உண்மையில் ஒரு நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதியிடமும் எமக்கு நீதியை வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். தற்போது நாம் மிகவும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளோம்.
பிள்ளைகளுடன் பல தாய்மார்கள் இருக்கிறார்கள். மூவரடங்கிய மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.
எனினும், ஒரு நீதிபதி இவர்களை குற்றமற்றவர்கள் என விடுவித்தார்.
அதுதான் எமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்காக இன்னும் ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக கருதுகிறோம். அந்த சந்தர்ப்பத்தையே நாம் பயன்படுத்துகிறோம். மேன்முறையீடு செய்து இந்த 12 பேரையும் விடுவிப்பதே எமது ஒரே எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.













