சீகிரியாவில் சோகம் - யானை தாக்கி வெளிநாட்டவர் பலி !


சீகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரும் அவரது மனைவியும் சீகிரியா - பிதுரங்கல வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போதே, இந்தக் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.