அந்தப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிஸாருக்கு இன்று (24) காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆணின் உடலில் சிறுபகுதி தீயினால் எரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













