விஜித் விஜயமுனி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை !


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (17) காலை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக தான் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதாக ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார்.