முதலாம் சாம பூஜையைத் தொடர்ந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் இந்த இளைஞர் மன்றத் தலைவர் த.சுந்தரலிங்கம் தலைமையில் அறநெறி பாடசாலை மாணவர்களின் அற்புதமான பொருத்தமான கலைநிகழ்வுகள் மண்டபத்தை பக்தி மயமாக்கின.
அருமையான மாணவர்களின் நடன அசைவுகள் பக்தர்களின் மனதில் தேவலோகத்தில் தேவதைகளே இறங்கி வந்து தெய்வீக நடனம் புரிவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது போல் இருந்ததாக மெய் மறந்து ரசித்தனர். மெய்யடியார்களும் இந் நிகழ்வை மிகவும் அர்ப்பணிப்புடன் ஒழுங்குபடுத்தியதற்காகப் பாராட்டத் தவறவில்லை.
இரண்டாம் சாமம் வரை நடைபெற்ற கலை விழா இந்து இளைஞர் மன்ற தலைவரின் கம்பீரமான பிள்ளையார் சுழி போட்ட பாடலுடன் பூஜை ஏற்பாடுகள் ஆலயத்தில் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க சிறப்பான பக்திப் பாடலுடன் மேலும் சில பெண், ஆண் பாடர்களும் இணைந்து இசைமழை பொழிந்த கொண்டிருக்க பக்தர்கள் அலைமோத லிங்கேஸ்வர பெருமானுக்கு உரிய முறைப்படி அனைத்தக் கிரியைகளும் செம்மையாக நடைபெற்றது.




.jpeg)


.jpeg)





.jpeg)






