
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளானை பகுதியில் திங்கட்கிழமை (23) மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
உரப்பையில் போட்டு, காட்டு பகுதியில் குறித்த மோட்டார் குண்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாராவது தமது காடியை சுத்தம் செய்யும்போது குறித்த குண்டு அங்கு காணப்பட்டதால் இவ்வாறு கொண்டுவந்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவை பெற்றபின் குறித்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












