100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது !


இரத்மலானை பகுதியில் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஆவார்.

கல்கிஸ்ஸை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்