இதற்கமைய, அவர்களுக்கு அந்த இராஜதந்திர பதவிகளில் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புதிய நியமனங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
தர்ஷன எம். பெரேரா - மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.எம்.எஸ்.பி. தஸநாயக்க - ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தயானி மெந்திஸ் - ஒஸ்ரியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.பி.டபிள்யூ. பத்திரண - ருமேனியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வி என்.ஐ.டி. பரணவிதான - எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.கே. சந்திரசிறி - இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தம்மிக்க பெர்னாண்டோ - கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுர விதானகே - லெபனானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி - ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
எம். பாரூக் எம். பௌசர் - பலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.










.jpg)

.webp)
.webp)