பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாவாவினுடைய பரிபூரண அனுகிரஹத்துடன் வீரமுனையில் ஸ்ரீ சாயி காயத்திரி ஹோமம்










 (சித்தா)


பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிறுவனங்களின் கிழக்குப் பிராந்திய இணைப்புக்குழு, பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியுடன் இணைந்து வீரமுனை, ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தில் எதிர்வரும் 31.03.2026 காலை 8.30 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாவாவினுடைய பரிபூரண அனுகிரஹத்துடன் ஸ்ரீ சாயி காயத்திரி ஹோமம் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வினை புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்திலிருந்து வருகை தரும் வேதவிற்பன்னர் ஸ்ரீ வேதநாராயணன் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் வேதவிற்பன்னர் ஸ்ரீ சங்கீத்குமார் சத்ய நாராயணன் ஆகியோர் இணைந்து நடாத்தவுள்ளனர்.

'காயத்திரி மந்திரம் அதை பாடி, போற்றி, ஜபித்து தியானிக்கும் அனைவரையும் காத்திடும்' இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பகவானின் பரிபூரண ஆசிகளை பெற்றுக் கொள்ளுமாறு பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிறுவனங்களின் கிழக்குப் பிராந்திய இணைப்புக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.