2026 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை பணியாளர்களால் 1,480.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (அதாவது 1.4 பில்லியன் டொலர்கள்) நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் பெறப்பட்ட பணப்பரிமாற்றம் 1,121 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
2026 பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை பணியாளர்களால் 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2025 பெப்ரவரி மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 548.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதற்கமைய, 2025 பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2026 பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களில் 47,819 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளனர். மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 3,241 இலங்கைத் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பணியகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.













