
(நூருல் ஹுதா உமர்)
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி இன்று (12) காலை 9.21 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.
மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த அதிகாரியாவார்.
அவர் இதற்கு முன்பு கல்முனை, மகாஒயா, உகண, பதியத்தலாவ மற்றும் திகன ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக பணியாற்றியதுடன், அனுராதபுரம் மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் அவர் இறுதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார்
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.









.jpg)

.webp)
.webp)