டுபாய் விமான நிலைய தாக்குதலில் நால்வர் காயம்!



டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கையாளப்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் இராணுவத்தால் இடைமறிக்கப்பட்ட ட்ரோன் ஒன்றின் சிதைவுகள் விழுந்ததில், அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் அடிக்கடி வந்து செல்லும் இடமான ஜெபல் அலி துறைமுகத்தின் ஒரு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.

டுபாய் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாகத் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில், இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் சிதைவுகள் தாக்கியதில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.