ஏற்கனவே லெபனானில் இருப்பவர்கள், வணிக ரீதியிலான விமானச் சேவைகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும் போதே இப்போதே லெபனானை விட்டு வெளியேறுமாறு சமூக ஊடகப் பதிவொன்றின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
லெபனானின் பாதுகாப்புச் சூழல் மிகவும் நிலையற்றது மற்றும் கணிக்க முடியாதது எனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக தெற்குப் பகுதி, பெக்கா மற்றும் பெய்ரூட்டின் சில பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.













