ஈரானுக்கு எதிரான போர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவிப்பு !


ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தமது நாடு தற்போது போரின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.