மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்தில் யானை தாக்குதலுக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் முனைக்காடு கிராமத்தில் யானை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர். சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஞானசிங்கம் அழகம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை(27) அதிகாலை முனைக்காடு கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதுடன் மனிதர்களையும் தாக்கி உள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்து, இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.













