ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழப்பு !


ஈரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
 
அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்திருந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

79 வயதான Mansoureh Khojasteh Bagherzadeh, அதி உயர் தலைவரை கொல்வதற்கு நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து சுயநினைவிழந்திருந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய குறித்த தாக்குதலில் ஈரானின் அதிஉயர் தலைவர், அவரது மகள், மருமகன், பேரப்பிள்ளை மற்றும் தற்போது மனைவி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர இராணுவத்தின் சிரேஸ்ட நிலை தலைவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.