எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் !


எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நாளைய தினமும் (02) வழமை போன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (01) விடுமுறை தினமாக இருந்தபோதிலும், ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தலைவர் தெரிவித்தார்.

அதற்கமைய, இன்று மாலை 5.00 மணி வரை 1,332,311 லீற்றர் டீசலும், 2,019,600 லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக டி.ஜே. ராஜகருணா சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, வீடுகளில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தி வைப்பது சட்டவிரோதமான செயற்பாடு எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன்காரணமாக, அவ்வாறான நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்