குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கைது



குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி பணிப்பாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான பிரசாத் ரணசிங்க இன்று செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.