இலங்கை அருகே ஈரான் கப்பலை மூழ்கடித்தது “வேடிக்கையாக இருக்கும்” என அமெரிக்க இராணுவம் கூறியது – ட்ரம்ப்


இலங்கை கடற்கரைக்கு அருகே IRIS Dena என்ற ஈரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கென்டக்கி மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், அந்த கப்பலை பிடிக்காமல் ஏன் மூழ்கடித்தார்கள் என்று இராணுவ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.

அப்போது சில அதிகாரிகள் “அதை மூழ்கடிப்பது பாதுகாப்பானது, அதைவிட ‘வேடிக்கையாகவும்’ இருக்கும்” என்று கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் 104 கப்பல் பணியாளர்கள் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த கப்பல் ஆயுதமில்லாமல் இந்தியாவில் நடைபெற்ற கடற்படை பயிற்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்ததாக ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை “கடலில் நடைபெற்ற கொடூரம்” என ஈரான் வெளிவிவகார அமைச்சர் கண்டித்துள்ளார்.