மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக முன்கூட்டியே எரிபொருள் விலை திருத்தம் - மயூர நெத்திகுமாரகே




மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாத இறுதியில் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும். அப்போது ஒரே கட்டமாக விலையை அதிகரித்தால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவார்கள். இதனை தடுப்பதற்காகவே தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.ஏனைய நாடுகளை காட்டிலும் குறைவான சதவீதத்தில் தான் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் குறித்து தெளிவுப்படுத்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் தேவைக்கு எரிபொருளை நுகர்வோரும் உள்ளார்கள், வழமைக்கு மாறாக எரிபொருளை கொள்வனவு செய்து அவற்றை பதுக்கி வைத்து நெருக்கடியான நிலையில் அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களும் உள்ளார்கள்.

பாதுகாப்பான வகையில் எரிபொருள் கையிருப்பை வைத்துக் கொண்டு தான் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும். ஒரே கட்டத்தில் விலையை அதிகரிக்க முடியாது என்ற காரணத்தால் தான் தற்போது எரிபொருள் விலை பகுதியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாத இறுதியில் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும். அப்போது ஒரே கட்டமாக விலையை அதிகரித்தால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவார்கள்.இதனை தடுப்பதற்காகவே தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான நிலையிலும் ஒரு தரப்பினர் வரிசையில் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்து அவற்றை கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.இவ்வாறான செயற்பாட்டை தடுப்பதற்காகவே எரிபொருள் தொகையில் ஒரு தொகையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.