நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை விடுதிகளின் அறைகளை முன்பதிவு செய்துள்ளதாக சங்கத்தின் தலைவர் மகிந்த தொடங்கப்பகமகே தெரிவித்துள்ளார்.
வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கிரிகரி வாவி வளாகம் உள்ளிட்ட நுவரெலியாவின் பிரதான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார ரீதியாக நுவரெலியா பகுதிக்கு இந்த விடுமுறைக்காலம் ஒரு சிறந்த வருமானத்தை ஈட்டித் தந்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.













