மாலைதீவு கடற்படை கப்பல் 'HURAVEE' கொழும்பிற்கு வருகை !


மாலைதீவு கடற்படை கப்பலான 'HURAVEE' 02 ஆம் திகதி நாட்டுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றனர்.

அதன்படி, கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Offshore patrol vessel வகை 'HURAVEE' என்ற கப்பலானது 48.9 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் குறித்த கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் அஹமட் நபியு மொஹமட் செயல்படுகின்றார்.

மேலும், இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.