இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் காரைநகர் கோவிளம் பகுதிக்கு அருகிலுள்ள இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அவர்கள் நேற்றிரவு கைதாகியுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் மீன்படி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த படகு ஒன்றையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகையும் இந்திய மீனவர்களையும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண காங்கேசன்துறையில் உள்ள கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.












