அனுமதிப்பத்திரமின்றி 150 லீற்றர் டீசலை வைத்திருந்த குற்றச்சாட்டில், நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
கொச்சிக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, நீர்கொழும்பு பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலுவகொட்டுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








.jpg)




