சந்தேக நபர் மலேசியாவின் குவாலாலம்பூரிலிருந்து Batik Air (OD-297) விமானத்தில் அதிகாலை 12.50 மணியளவில் வந்திருந்தார்.
அறிவிக்கப்படாத சிகரெட் சரக்குகளை விமான நிலையத்திலிருந்து வெளியேற்ற முயன்ற போது அவர் சுங்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேக நபருக்கு ரூ.100,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.












