அரச வைத்தியர்கள் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவு


நாடு முழுவதிலும் நாளை (9) காலை 8 மணி முதல் 48 மணிநேரத்திற்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
 
வைத்திய பயிற்சியாளர்களின் நியமனங்களை வழங்குவது தொடர்பாக, சுகாதார அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி செயற்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.