மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி !


மட்டக்களப்பு, ஆயத்தியமலை பொலிஸ் பிரிவில் விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

புது மண்டபத்தடி முண்டாளமடு பகுதியில் வசிக்கும் 69 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

வயலில் விவசாய வேலைகளை செய்து கொண்டு காவலுக்காக கூலி தொழில் செய்து வந்த போதே குறித்த பகுதிக்குள் செவ்வாய்கிழமை (31) நுழைந்த காட்டு யானை இவரை தாக்கியுள்ளது.

இவரின் சடலம் புதன்கிழமை (01) காலை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.