வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்ற லொறி - மூவர் காயம்




நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை (Forest Department) காரியாலயத்திற்கு அருகில் புதன்கிழமை (01) மாலை குப்பை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதில்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறி நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான குப்பை அகற்றும் லொறியொன்று எனவும் தெரியவந்துள்ளது.

இதன் போது லொறியின் சாரதியும் நடத்துனர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக வீட்டு மதில்சுவர் மற்றும் வீட்டிற்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பாக நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,