ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு !


ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 06 ஆம் திகதி முதல் வழமை போல், நடைபெறுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் சீர் செய்யப்பட்டவுடன் அனைத்து சேவைகளும் தொடர்ந்து செயல்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.கணினி அமைப்பைச் சீர் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைத் தகவல்களைச் சரிபார்த்தல் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் மட்டுப்படுத்தலுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாற்று முறைகளைக் கையாள வேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுள்ளது