பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (22) இரவு இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த விடுதியின் முகாமையாளர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்கள் என மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட முகாமையாளர் 31 வயதுடையவர் எனவும் பெண்கள் 25 மற்றும் 29 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், பெத்தியாகொட, மாவனல்லை மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













