(சித்தா) சாரண தலைவர் பயிற்றுனராக (L.T) மட்டக்களப்பை சேர்ந்த ஆறுமுகம்-புட்கரன் நான்கு மணிகள் கொண்ட கழுத்தணியைப் பெற்றுக் கொண்டார் 1975ம் ஆண்டு பாடசாலையில் கல்வி கற்கும் போது சாரணியத்தல் இணைந்த இவர் பின்னர் பட்டிருப்பு மகாவித்தியாலயத்திலும் சாரண மாணவனாக இருந்தார் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக செயற்பட முடியாமல் போனாலும் சாரணியத்தில் இருந்த ஈடுபாடு காரணமாக 1988 முதல் பழுகாமம் கண்டுமணி ம.வியில் தனது பணியைத்தொடர்ந்தார் பின்னர் 1996 இல் கலைக்கூறு -1 ஐ பூர்த்தி செய்து சாரண தலைவரானார் 1999ம் ஆண்டில் கலைக்கூறு 11 ஐ பூர்த்தி செய்தார். அதனைத் தொடர்ந்து அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆனையாளர் S.தேவராஜன் அவர்களின் வழிகாட்டலில் 2000 ம் ஆண்டு கலைக்கூறு -1V ஐ பூர்த்தி செய்து அதற்கான செயற்றிட்டங்களை நிறைவு செய்தார் இதன் காரணமாக 2003 இல் தரு சின்னத்தைப் பெற்றுக் கொண்டார் அதனைத்தொடர்ந்து 2018 இல் உதவி தலைவராக (ALT)மூன்று மணிகளைப் பெற்றுக் கொண்டார் அதனைத் தொடர்ந்து 2023 இல் சாரண தலைவர் பயிற்றுனருக்கான பயிற்சி நெறிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அப்பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இவர் அதற்கான செயற்றிட்டங்களைப் பூர்த்தி செய்து தற்போது சாரண தலைவர் பயிற்றுனரானார். இதற்கமைய நான்கு மணிகள் கொண்ட கழுத்தணியையும் பெற்றுக்கொண்டுள்ளார். சாரண தலமையகத்தின் தேசிய பயிற்சி ஆணையாளராக இருக்கும் கேணல் பத்மலால் பெரேரா அவர்கள் நான்கு மணிகள் கொண்ட கழுத்தணியை அணிவித்து உத்தியோக பூர்வமாக சாரண தலைவர் பயிற்றுனருக்கான அங்கிகாரத்தை இவருக்கு வழங்கி வைத்தார்.
இவர் உதவிமாவட்ட ஆணையாளர் (தொடர்பாடல்) உதவி மாவட்ட ஆணையாளர் (பயிற்சி ) என பல பதவிகள் வகித்ததோடு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் வளர்ச்சியில் அளப்பரிய பணியாற்றியுள்ளார். வடக்கு கிழக்கில் பல மாவட்டங்களில் இவர் வளவாளராக பணியாற்றியுள்ளார். இவரது துனைவியார் ச.புட்கரன் அவர்கள் தரு சின்னம் பெற்ற சாரண தலைவியாக உள்ளார் மட்டக்களப்பு மாவட்ட சாரண வரலாற்றில் முதல் பெண் சாரணர்கள் ஐந்து (05) பேருக்கு ஜனாதிபதி விருது இவர் பெற்றுக் கொடுத்திருந்தார் அதிகஸ்டப்பிரதேச பாடசாலையான திக்கோடை கணேச ம.வி யை சேர்ந்த சாரணர்களே அவ்விருதைப் பெற்றவர்களாவர். அதேபோல் இவர்களது மகன் பு.கேமாஞ்சனன் ஒரு ஜனாதிபதி விருது பெற்ற சாரணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் சாரண தலைவர் பயிற்றுனரான (L.T)மூன்றாவது தலைவராக இவர் உள்ளார் ஏற்கனவே இருந்த எஸ்.தேவராஜன், ஜே.எஸ்.பிள்ளை சாரண தலைவர் பயிற்றுனர் பயிற்சியை நிறைவு செய்திருந்தனர் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு சாரண தலைவர் பயிற்றுனராக இவரே உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆசிரியராகவும் பேசப்படும் ஓர் அதிபராகவும் செயற்பட்டார் . சிறந்த சமுக சேவையாளரான இவர் அகில இலங்கை சமாதான நீதவானாகவும், பல அமைப்புகளின் நிருவாகங்களில் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.












