சுமார் 35 உரைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 1,126.75 கிலோகிராம் எடையுள்ள பீடி இலைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













