மின்விநியோக செயலிழப்பு ஒன்றும் புதிதல்ல, திட்டமிட்ட வகையில் மின்விநியோகத்தை துண்டிப்பதாக இருந்தால் முன்கூட்டியதாகவே அறிவிக்கப்படும். மின்விநியோகம் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் தான் எதிர்க்கட்சிகள் விடயங்களை முன்வைக்கின்றன என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற அமர்வின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற திடீர் மின்விநியோக துண்டிப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
திட்டமிட்ட வகையில் எப்பகுதிகளிலும் மின்விநியோகம் துண்டி க்கப்படவில்லை. மின்விநியோக செயலிழப்பின் போது ஏற்படும் பாதிப்புக்களினால் மின்விநியோகம் செயலிழக்கப்படும்.இது ஒன்றும் புதியதொரு விடயமல்ல, இதனை மின்விநியோக துண்டிப்பு என்று குறிப்பிட முடியாது.
மின்விநியோகத்தை துண்டிப்பதாயின் திட்டமிட்ட அறிவுறுத்தல்கள் முன்கூட்டியதாக அறிவிக்கப்படும்.மின்விநியோகம் குறித்து எதிர்க்கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் தான் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.மின்னுற்பத்தி கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.











.jpg)
