அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடையாள வேலைநிறுத்தம் நிறைவு


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை நிறைவடைவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார்.