மட்டக்களப்பு - தாண்டியடி பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி !

( தவக்குமார் )

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தாண்டியடி பிரதான வீதியில் ஜீப் மோதி இடம்பெற்ற வீதி விபத்தில் ( 13ம் திகதி திங்கள் கிழமை )  இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்புக்காமி கிஷ்ணபால ( 66 வயது ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ் விபத்தில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட இரண்டு விஷேட அதிரடிப்படையினர்  விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட்னர்.

மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவானின் பணிப்பிற்கு அமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற் கூற்று பரிசோதனைக்கு சட்ட வைத்திய அதிகாரியை பரிந்துரைத்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.