சிங்கப்பூரில் விசா காலாவதி ஆன பின்னரும் சுமார் 9 மாதங்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் சோதனைச்சாவடி அதிகாரசபை (ICA) மேற்கொண்ட அதிகாலை சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 27 வயதுடைய இந்த நபர் கடந்த வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டார்.
சமூக வருகை அனுமதி (Social Visit Pass) 2025 ஜூன் 28 அன்று காலாவதியான பின்னரும் அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் முன்கூட்டியே கண்காணிப்பு மேற்கொண்ட அதிகாரிகள், சந்தேக நபரின் அடையாளம் மற்றும் குடிவரவு நிலையை உறுதிப்படுத்திய பின்னர், குடிவரவு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.











