நிகதலுபொத, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று புதன்கிழமை (09) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தாண்டு விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளதோடு, இருப்பினும், அதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இரவு வேளையில் தனிப்பட்ட முறையில் விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
அந்த விருந்து இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, மாணவி ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். இதன்போது மாணவர் ஒருவரும் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இதனை அவதானித்த அந்த மாணவியின் நண்பர் (உயிரிழந்த மாணவர்), மாணவியைப் பின்தொடர்ந்து சென்ற மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது, தாக்குதலுக்கு உள்ளான மாணவரின் நண்பர்கள் குழுவினர், தாக்குதல் நடத்திய மாணவரை (மாணவியின் நண்பரை) கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த மாணவர் ஹோட்டல் ஊழியர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் 05 மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












