முன்னதாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், சில பள்ளிகள் இத்தகைய நிகழ்ச்சிகளில் அதிக செலவினத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன. இதனால் பெற்றோருக்கு தேவையற்ற நிதிச்சுமை ஏற்படுகிறது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்கால நிகழ்ச்சிகள் எளிமையான முறையில், குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டும் என்றும், பெற்றோருக்கு கூடுதல் செலவுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பள்ளி நிர்வாகங்கள் பள்ளி நிதி மேலாண்மை தொடர்பான 54/2023 சுற்றறிக்கையையும், அதனுடன் தொடர்புடைய பிற நிதி விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நினைவூட்டப்பட்டுள்ளது.












