அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதிக்கு புறம்பாக ஆறு பணியாளர்களை சட்டவிரோதமாக நியமித்து, அவர்களை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாக அமர்த்தி, அவர்களுக்கு தேசிய தொலைக்காட்சி ஊடாக ஊதியம் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு சுமார் ரூ.14.32 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பந்தப்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாக தவறுகள் குறித்து மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சட்ட நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.












