
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன. பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 2026 ஏப்ரல் 12 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததையடுத்து, இலங்கை கடற்படை தனது கடற்படை மரபுகளின்படி கப்பல்களை வரவேற்றது.
கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ' ‘PNS TAIMUR’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NIAMAT SAEED KHAN உம் ‘PNS ASLAT' கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NADIR MATEEN AFRIDI உம் உள்ளனர்.
மேலும், இந்தக் கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் (Bilateral Naval Exercise LION STAR V) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளன.











