GMOA பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு !


அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என அந்தச் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.